பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விதி 110-ன் கீழ் விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்தார். இந்த அறிவிப்பினால் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய கிட்டத்தட்ட 12, 110 கோடிகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்தது. கூட்டுறவு வங்கியில் நிலுவையில் உள்ள விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி. இதற்கான அரசாணை 08.02.2021 அன்று தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது.
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் இந்தத் தள்ளுபடி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய நகைக்கடன் களுக்கும் உண்டு என்று தெளிவுபடுத்தினார். தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடனுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி செல்லும் மற்ற வங்கிகளில் பெற்ற விவசாய கடனுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.