Valentine’s week 2021 - காதலர் வாரம் 2021

 

valentines week - பிப்ரவரி மாதம் என்றாலே காதலர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். நீங்கள் யாரையாவது காதலித்தால் அதை தயங்காமல் இப்பொழுது வெளிப்படுத்த வேண்டும் ஏனெனில் அதற்கான நேரம் வந்துவிட்டது. இதற்காகவே மிகவும் முக்கியமான வாரமாக அதாவது காதல் வாரமாக (valentines week) பிப்ரவரி 7 ஆம் நாள் முதல் பிப்ரவரி 14 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான பிப்ரவரி 14 அன்று அன்பின் வெளிப்பாடாக காதலர் தினம் (valentines day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

காதலர் வாரத்தின் (valentines week) ஒவ்வொரு நாளுக்கும் உள்ள தனிச்சிறப்பை பார்ப்போம்.

Valentine’s week

காதலர்கள் மட்டுமல்ல, புதிதாக திருமணமான தம்பதிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு முன்பு திருமணமான தம்பதியினரும் தங்கள் அன்பை வெளிப்படுத்த இந்த வாரத்தைப் பயன்படுத்தலாம்

பிப்ரவரி 7 : ரோஸ் டே (Rose day) காதல் வாரத்தின் முதலாம் நாள், காதலின் அடையாளமாக ரோஜா பூக்களை நீங்கள் விரும்பிய நபருக்கு பரிசளியுங்கள்.

பிப்ரவரி 8 : Propose day இது மிகவும் சிறப்பான நாள், உங்களுடைய காதலர்/ காதலியிடம் உங்களுடைய காதலை பயப்படாமல் அவங்களுடைய கண்களை பார்த்து நேராக சொல்ல வேண்டிய நாள்.


பிப்ரவரி 9 : Chocolate day. நீங்கள் வெளிப்படுத்திய காதல் வெற்றி அடைந்துவிட்டால் இனிப்புடன் கொண்டாட வேண்டிய நாள். உங்கள் துணைக்கு பிடித்த சாக்லேட் பரிசளியுங்கள்.

பிப்ரவரி 10 : Teddy day பெண்களுக்கு பொதுவாகவே டெடிபியர் என்றால் பிடிக்கும். நீங்கள் காதலிக்கும் நபர் பெண்ணாக இருந்தாள் கண்டிப்பாக ஒரு டெடிபியர் இந்த நாளில் வாங்கி பரிசளியுங்கள்.

பிப்ரவரி 11 : Promise day காதல் வாரத்தின் ஐந்தாவது நாளான இந்நாள் மிகவும் முக்கியமான நாள். காதலிப்பவர்கள் இருவரும் தாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் ஒன்றாக இருப்போம் என உறுதிமொழி எடுக்கும் நாள்.

பிப்ரவரி 12 : Hug day சிறந்த அரவணைப்பு மன நிம்மதி இல்லாதவர்களுக்கு கூட சில நேரம் நிம்மதி தரும். வார்த்தைகள் மூலம் தரும் நம்பிக்கையையும் தைரியத்தையும் விட ஒரு நல்ல அரவணைப்பில் அதிகமாய் தந்து விடலாம். அதனால் உங்கள் துணைக்கு அரவணைப்பை கொடுங்கள்.

பிப்ரவரி 13 : Kiss day அன்பைத் தெரிவிக்க பல வழிகள் இருக்கின்றன அவற்றில் முக்கியமான ஒரு வழி முத்தம். உங்கள் துணைக்கு முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள்.

பிப்ரவரி 14 : valentine’s day காதல் வாரத்தின் கடைசி நாள் வேலன்டைன்ஸ் டே (valentines day). இது புனித வேலன்டைன் ( saint valentine) எனும் ரோம் புனிதரின் ஞாபகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து கொண்டாட வேண்டிய நாள்.

+6

1 thought on “Valentine’s week 2021 - காதலர் வாரம் 2021”

Leave a Comment

Translate »